உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் M.A., M.Lit., Ph.D.,

ஒரு சிறு குறிப்பு

பிறந்த தேதி, இடம்

 

16.09.1932, உளுந்தூர்ப்பேட்டை

வகுப்பு, இனம்

 

பிற்படுத்தப்பட்ட வகுப்பு, தமிழினம்

முகவரி

 

முகவரி : எண் : 14
அமிர்தம் அவென்யு
பரணி தெரு
வேளச்சேரி
சென்னை - 600 042

தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள்

 

+91 95660 42884
+91 99400 72872

கல்வித்தகுதி

 

முதுகலை பட்டம் (எம்.ஏ.) :
தமிழ் மொழி மற்றும் இலக்கியம் முதல் வகுப்பு - 1960 பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

எம்.லிட் :
நற்றிணை - ஓர் இலக்கிய ஆய்வு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - 1971

முனைவர் பட்டம் (பி .எச்.டி.) :
" தமிழ் நாவல்களின் தோற்றமும் எழுச்சியும் " அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - 1978

ஆற்றிய பணிகள்

 

ஆசிரியராக
விரிவுரையாளர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் : தமிழ்த்துறை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அண்ணாமலை நகர் 1960-72
பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் "தமிழ்த்துறை" -S.I.V.E.T. கல்லூரி, சென்னை - 1972-74

அரசு நிர்வாகியாக
உதவி இயக்குனர் - மொழிப்பெயர்ப்புத்துறை தலைமைச் செயலகம் - தமிழ்நாடு அரசு 1975 - 78.
இயக்குனர் - தமிழ்ப் பண்பாட்டு மையம் தலைமைச் செயலகம் - தமிழ்நாடு அரசு 1978 - 81.

கவிஞனாக
தமிழ்நாட்டின் தன்னிகரற்ற கவிஞர், உலகளாவிய புகழ் கொண்டவர். சமுதாயம், சான்றோர் தமிழ்மொழி , நாடு, தமிழ் இலக்கியம் போன்ற பல தலைப்புகளில் தமிழில் கவிதைகள் மற்றும் பக்திப் பாடல்கள் ஏறத்தாழ 4000 (நான்காயிரம்) பாடல்கள் அவரால் இயற்றப்பட்டு, ஒலிப்பேழைகளாகவும், குறுந்தகடுகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேசப்பற்றுடையவராக
தேச ஒற்றுமைக்காக பல பாடல்களை இயற்றியுள்ளார். அவை வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்பட்டுள்ளன. தொலைக்காட்சி நிலையத்திலும் ஒளிபரப்பப்பட்டுள்ளன. தேசப்பற்று பாடல்களின் தொகுப்பான "செக்கர்வானம்" என்ற புத்தகத்தை இந்திய அரசு நூலாக வெளியிட்டுள்ளது.

கலைஞனாக
புகழ் பெற்ற பாடல்கள் பல தமிழ் திரைப்படங்களுக்கும், நாட்டிய நாடகங்களுக்கும் இயற்றியுள்ளார்

பேச்சாளராக
பல கவியரங்கங்களிலும், பட்டிமன்றங்களிலும் பங்கேற்றுள்ளார். வானொலி மற்றும் தொலைக்காட்சியில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.

எழுத்தாளனாக
அவர் எழுதிய கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளன.

 

மொழிபெயர்ப்பாளராக
சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவைகள்

1)தேவி மஹாத்மியம் - ஓர் நாட்டிய நாடகம்
2)ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் - திருமதி. பம்பாய் சகோதரிகளால் பாடப் பெற்று, பத்து லட்சம் ஒலிப் பேழைகளுக்கு மேல் வெளியிடப்பட்டது.
3) ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் - ஆதிசங்கரர்
4) கனகதாரா ஸ்தோத்ரம் - ஆதிசங்கரர்
5) விஷ்ணு சகஸ்ரநாமம்
6) பஜ கோவிந்தம்
7) ஆதித்ய ஹ்ருதயம்
8) லட்சுமி நரசிம்ம கரவலம்பம்
9) ஸ்ரீ மஹா கணபதி சகஸ்ரநாமம்
10) ஸ்ரீ சாஸ்தா சகஸ்ரநாமம்
11) திரி சதி
12) ஸ்ரீ ஸ்துதி
13) சிவ ஸ்தோத்திரங்கள்
14) ஸ்ரீ துர்கா ஸ்தோத்திரங்கள்
15) ஸ்ரீ ஸ்கந்தலஹரி
16) சௌந்தர்யலஹரி
17) ஸ்ரீ ஹனுமன் சாலிஸா
18) ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம்
19) மகாலட்சுமி ஸ்தோத்திரம்
20) ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்தோத்திரங்கள்
21) ஸ்ரீ துர்கா ஸகஸ்ரநாமம் -
மற்றும் பல ...

விருதுகள்

 

1) பக்த சிகாமணி - 1971 சென்னை (Spiritual Study Circle)
2) இசைக்கவி அரசு -1972 பாவலர் மன்றம் திருப்பனந்தாள் தஞ்சாவூர் மாவட்டம்
3) கலைமாமணி - 1975 தமிழ்நாடு அரசு - சென்னை
4) அருட்செல்வர் - 1984 உலக சமுதாய மையம் சென்னை (The world Community Centre)
5) தெய்வீகக் கவிஞர் - 1989 ஸ்ரீ லட்சுமி நாராயணா க்ரூப் ஆஃப் கம்பெனிஸ், சென்னை
6) பெருங்கவிஞர் திருவல்லிக்கேணி முருகனடியார் சங்கம்

 

 

7)

தமிழறிஞர், கலைமாமணி உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் அவர்களின் நூல்கள் தமிழக அரசால் 20/01/2020 அன்று நாட்டுடைமை ஆக்கப்பட்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் கௌரவிக்கப்பட்டது.

தெய்வத்திருவடி அடைந்த நாள் / இடம்

 

24.08.2003 / சென்னை